திசையன்விளை அருகே லாரி மோதி பள்ளிக்கூட மாணவன் உடல் நசுங்கி பலி ‘லிப்ட்’ கேட்டு சென்றவனுக்கு நேர்ந்த துயரம்
திசையன்விளை அருகே லாரி மோதியதில் பள்ளிக்கூட மாணவன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.
திசையன்விளை,
திசையன்விளை அருகே லாரி மோதியதில் பள்ளிக்கூட மாணவன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.
8–ம் வகுப்பு மாணவன்
நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் சண்முகவேல்(வயது 14). இவன் இடையன்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல் நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் சண்முகவேல், பஸ்சுக்காக காத்து நின்றான்.
அப்போது அந்த வழியாக காரிகோவிலை சேர்ந்த கதிரவன், தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் சண்முகவேல் ‘லிப்ட்’ கேட்டுள்ளான். அவரும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தவே சண்முகவேலும், மற்றொரு மாணவனும் அதில் ஏறிச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளின் இருக்கையில் கடைசியாக சண்முகவேல் இருந்துள்ளான்.
உடல் நசுங்கி பலி
ஆனைகுடி விலக்கில் உள்ள திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் திரும்பியபோது, அந்த வழியாக கருங்கல் ஏற்றி வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சண்முகவேல், லாரி சக்கரத்தில் சிக்கினான். இதில் அவனது உடலில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சண்முகவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற கதிரவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றொரு மாணவனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்ததும் உவரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story