திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவிப்பு
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆதித்தனார் கல்வி நிறுவனம்
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 4–ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்வி நிறுவன செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஒய்ஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காயாமொழி
இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், காயாமொழி ஓய்வுபெற்ற கால்நடை டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தையல்பாகு ஆதித்தன், தங்கேச ஆதித்தன்,
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஜெயராஜ், நற்பணிமன்ற நகர துணை தலைவர் அரசப்ப அய்யர், நற்பணிமன்ற ஆயுட்கால உறுப்பினர் அம்பி கண்ணன், ராமசுப்பு அய்யர் உள்ளிட்டவர்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காயாமொழியில் அலங்கரிக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முருகன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், மொகுதும் ஆதித்தன், பகவதி ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி–உடன்குடி
கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு ஞானமலர் பெட்ரோல் பங்க் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நகர தலைவர் மைக்கேல் அமலதாஸ், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அமலி அமலதாஸ், நற்பணி மன்ற நகர செயலாளர் திருப்பதி, பொருளாளர் சொர்ணமணி, கூசாலிபட்டி நாடார் சமுதாய தலைவர் தனராஜ், பவுன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சியை அடுத்த வட்டன்விளை வி.வி.பெருமாள் தொடக்கப் பள்ளிக்கூடத்தில் அலங்கரிக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்துக்கு பள்ளிக்கூட செயலாளரும், இந்து முன்னணி மாநில துணை தலைவருமான வி.பி.ஜெயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற 5 மாணவ– மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை தேவகி ரஞ்சனி மற்றும் ஆசிரியர்கள், மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story