விவசாய தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சீர்காழியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளான சீர்காழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நீதிசோழன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில், விசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கும் விலையில்லா அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், ராமன், சுந்தரய்யா, வரதராஜன், பிரபாகரன், பாஸ்கர், தியாகராஜன் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்கள், கோரிக்கை மனுவை தாசில்தார் மலர்விழியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story