4–ம் ஆண்டு நினைவு நாள் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை


4–ம் ஆண்டு நினைவு நாள் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை
x
தினத்தந்தி 20 April 2017 4:15 AM IST (Updated: 20 April 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 4–ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று சென்னையை அடுத்த

செங்குன்றம்,

 புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாயிலில் உள்ள பா.சிவந்தி ஆதித்தனார் திருஉருவ சிலைக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவரும், காமராஜர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவருமான பி.சின்னமணி நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் சென்னை வாழ் நாடார்கள் சங்க செயலாளரும், காமராஜர் கல்வி அறக்கட்டளை செயலாளருமான டி.தங்கமுத்து, சென்னை வாழ் நாடார்கள் சங்க பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், துணைத்தலைவர் கரு.பி.சின்னதுரை, நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரி செயலாளரும், சென்னை வாழ் நாடார்கள் சங்க துணைத்தலைவரும், சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான எஸ்.கோவிந்தசாமி, அறக்கட்டளை உறுப்பினர் பி.வேல்ராஜ் நாடார், பாலிடெக்னிக் நிர்வாக உறுப்பினர்கள் ஜேம்ஸ், நாகராஜன் மற்றும் வெள்ளைச்சாமி, பள்ளி மற்றும் பாலிடெக்னிக் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story