உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 April 2017 4:20 AM IST (Updated: 23 April 2017 4:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

புத்தகம் வாசித்தலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் ராமநாதபுரம் பாரதிநகரில் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ள்ி, எலைட் பள்ளி ஆகியவற்றை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டிகள்

ஊர்வலம் ராமநாதபுரம் பாரதிநகரில் தொடங்கி பிரதான சாலை வழியாக டி-பிளாக்கில் உள்ள மாவட்ட மைய நூலக வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் புத்தகம் வாசித்தலின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் பொது நூலகத்துறையின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை, கதை சொல்லுதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தாசில்தார் சண்முகசுந்தரம், மாவட்ட மைய நூலகர் அற்புதஞான ருக்மணி, வாசக வட்ட தலைவர் மங்களசுந்தரமூர்த்தி உள்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story