பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் தீர்மானம்
பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் எல்.எப். ரோடு மைதானத்தில் ஐக்கிய சமாதான பேரவை சார்பில், இஸ்லாமிய எழுச்சி மாநாடு கடந்த 3 நாட்கள் நடந்தது. மாநாட்டில் தினமும் இஸ்லாமிய தலைவர்களின் சொற்பொழிவுகள், கவியரங்கம், பட்டிமன்றம், இஸ்லாமிய கண்காட்சி நடந்தது. நிறைவு நாள் மாநாட்டுக்கு காயல்பட்டினம் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அபுபக்கர் ஷாதுலி பாஸி கிராஅத் ஓதினார். மாநாட்டு குழு தலைவர் முகமது இஸ்மாயில் வரவேற்று பேசினார்.
பேராசிரியர் பசூல் அஸ்ஹப் பாஸி, ஐக்கிய சமாதான பேரவை தலைவர் ஹாமித் பக்ரி, பொதுச்செயலாளர் முஜீபுர் ரஹ்மான் பாகவி, சென்னை கைருல் பரிய்யா மகளிர் அரபி கல்லூரி முதல்வர் ஷேக் அப்துல்லா ஜமாலி, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பாருக் பாஸி, சதீதுத்தீன் பாகவி, சாகுல் அமீது, அப்துல்லா மிஸ்பாஹி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
பொது சிவில் சட்டம் என்ற பொருத்தமற்ற வாதத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குற்றங்களை தடுத்து நிறுத்திட கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மக்களின் மேம்பாட்டுக்காவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் வட்டியில்லா வங்கியை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி, நம் நாட்டை வளம் பெறச் செய்ய வேண்டும்.
விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் வாடுகிறவர்களை விடுவிக்க வேண்டும். தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதில் மதசாயம் பூசி பாரபட்சம் காட்ட கூடாது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் விஷமிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story