வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்


வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 27 April 2017 1:45 AM IST (Updated: 26 April 2017 8:04 PM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வள்ளியூர்,

வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழா

குகைக்கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10.55 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 6 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் பலிநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இரவு மயில் வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம், வீதிஉலா நடைபெறுகிறது.

தேரோட்டம்

விழாவில் சிகர நிகழ்ச்சியாக வருகிற 4–ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு காலையில் சுவாமி– அம்பாளுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அய்யர்சிவமணி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ஜெகநாதன் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story