மின்கம்பியில் உரசியதால் டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் தீயில் எரிந்து நாசம்


மின்கம்பியில் உரசியதால் டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 29 April 2017 3:15 AM IST (Updated: 29 April 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டரில் மிக உயரமான அளவுக்கு ஏற்றப்பட்டு இருந்த வைக்கோல், சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது.

திருத்தணி,

திருத்தணியை அடுத்த ஓரம்தாங்கல் குப்பத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். விவசாயி. இவர், சொந்தமாக பசு மாடுகள் வளர்த்து வருகிறார். அவற்றுக்கு தேவையான தீவனமான வைக்கோல் வாங்க தனது டிராக்டரில் திருத்தணி அருகில் உள்ள பூனிமாங்காடுக்கு வந்தார்.

அங்கு வைக்கோல் வாங்கி அதை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார். பூனிமாங்காடு சாலையில் செல்லும் போது, டிராக்டரில் மிக உயரமான அளவுக்கு ஏற்றப்பட்டு இருந்த வைக்கோல், சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வரதராஜன், டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி டிராக்டரில் இருந்த வைக்கோலில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதில் வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது. நல்லவேளையாக தீ விபத்தில் டிராக்டர் எந்த சேதமும் இன்றி தப்பியது. இதுபற்றி திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story