மின்சாரத்தில் இயங்கும், 3 சக்கர மோட்டார்சைக்கிளை கண்டுபிடித்த பஸ் டிரைவர்


மின்சாரத்தில் இயங்கும், 3 சக்கர மோட்டார்சைக்கிளை கண்டுபிடித்த பஸ் டிரைவர்
x
தினத்தந்தி 28 April 2017 11:44 PM GMT (Updated: 28 April 2017 11:44 PM GMT)

எரிபொருளை சிக்கனப் படுத்த மின்சாரத்தில் இயங்கும் 3 சக்கர மோட்டார்சைக்கிளை பஸ் டிரைவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.

சென்னிமலை,

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு சாலையை சேர்ந்தவர் வேல்கனி (வயது 52). 5-ம் வகுப்பு வரை தான் படித்து உள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளைய த்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 6 ஆண்டுகளாக பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் சென்னிமலை யில் தங்கியிருந்து அந்த பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகளை பஸ்சில் கல்லூரிக்கு அழைத்து சென்று வருகிறார்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே ஏதாவது ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது. குடும்ப சூழல் காரணமாக இவர் பஸ் டிரை வர் வேலையில் சேர்ந்தார். ஆனாலும் சாதிக்க வேண்டும் என்ற அவருடைய கனவு நீர்த்து போகவில்லை.

3 சக்கர மோட்டார்சைக்கிள்

வாகனங்களில் பயன்படுத் தும் எரிபொருளான டீசல் மற்றும் பெட்ரோல் அடிக்கடி விலை உயர்வு ஏற்பட்டு வந்த தும், அவைகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வந்ததையும் அவர் அறிந்து வைத்து இருந்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் வாகனங்களுக்கு பெட் ரோல் மற்றும் டீசலுக்கு மாற் றாக மின்சாரத்தை பயன் படுத்தக்கூடாது என அவருடைய மூளை சிந்திக்க தொடங்கியது.

எப்படி ரெயில் மின்சாரத்தில் இயங்குகிறதோ அதுபோல் கார், பஸ், லாரி போன்ற வாகனங்களையும் மின்சாரம் மூலம் இயக்க வேண்டும் என்று எண்ணினார். இதை த்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயன்றார். அதன்பயனாக மின்சாரத்தில் இயங்கும் 3 சக்கர மோட்டார்சைக்கிளை கண்டுபிடித்து உள்ளார்.

மின் தூக்கிகள்

இதுகுறித்து வேல்கனி கூறியதாவது:-

தற்போது உலகமெங்கும் சாலையில் கோடிக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. இந்த வாகனங்களுக்கு எரிபொருளாக பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே இருந்தது. எனவே இதற்கு மாற்று ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினேன். இதன் முதல் முயற்சியாக மின்சாரத்தில் இயங்கும் 3 சக்கர மோட்டார்சைக்கிளை உருவாக்கி உள்ளேன்.

இந்த முறையை வாகனங்க ளுக்கும் பயன்படுத்த முடியும். அதாவது ரெயில்களுக்கு அது செல்லும் திசையிலேயே மின் கம்பிகள் இருக்கும். அதுபோல் ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கும் சாலையின் இரு புறமும் மின் கம்பிகள் ஏற்படுத்த வேண்டும். பின்னர் ரோட்டின் குறுக்கே மின் கம்பிகள் அமைக்க வேண்டும். 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 என்ற விகிதத்தில் தார் ரோட்டின் குறுக்கே மின் கம்பிகள் அமைத்தால் போது மானது. ரோட்டில் செல்லும் வாகனங்கள் அந்த மின் கம்பிகளில் உரசி செல்லும்படி இருக்க வேண்டும். அவ்வாறு மின் கம்பிகளில் உரசி செல்வதற்கு ஏற்றாற்போல் வாகனங்களின் மேல் பகுதியில் மின் தூக்கிகள் தயார் செய்ய வேண்டும்.

3 ஆண்டுகள்

இதனை முதல் கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களில் செயல்படுத்தலாம். இதன் மூலம் தினமும் லட்சக்கண க்கான வாகனங்களை மின்சாரத்தால் இயக்குவதன் மூலம் எரிபொருளையும் சிக்கனப்படுத்த முடியும். என்னுடைய கண்டுபிடிப்பு குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தெரிவித்துள் ளேன். ஆனால் அங்கிருந்து சரியான பதில் கிடைக்க வில்லை. இந்த 3 சக்கர மோட்டார்சைக்கிளை உருவா க்க 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவு செய்து உள்ளேன். இந்த ஆராய்ச்சிக்காக சம்பளத்தை செலவு செய்ததால் குடும் பத்தினர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டனர்.

இவ்வாறு வேல்கனி கூறினார். 

Next Story