தூத்துக்குடியில் அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்


தூத்துக்குடியில் அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 29 April 2017 8:45 PM GMT (Updated: 2017-04-29T19:45:02+05:30)

தூத்துக்குடியில் அரசு டாக்டர்கள் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் அரசு டாக்டர்கள் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முன்பு இருந்து ஆசிரியர் காலனி வரை டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மாவட்ட தலைவர் குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் மோசஸ் பால் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கடந்த 20–ந் தேதியில் இருந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் காலை 1½ மணி நேரம் மட்டும் வெளிநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து விட்டு, பின்னர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

10–ம் நாளாக நேற்றும் டாக்டர்களின் போராட்டம் தொடர்ந்தது. காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும் வெளிநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி, ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

அரசு ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு தாலுகா அலுவலகம், எட்டயபுரம் ரோடு, அம்பேத்கர் சிலை வழியாக சென்று மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தனர். அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் மோசஸ் பால், இந்திய மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் சீனிவாசன், டாக்டர்கள் சிதம்பரம், செல்வராஜ், பாரதி மோகன், சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story