மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 2–ந் தேதி தொடங்குகிறது

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 2–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 29 April 2017 8:15 PM GMT (Updated: 2017-04-29T19:45:03+05:30)

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

தூத்துக்குடி,

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

தூத்துக்குடி மாவட்டம் மின்பகிர்மான வட்டத்தில் கோட்ட அளவில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான கூட்டம் வருகிற 2–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்த கூட்டம் வருகிற 2–ந் தேதி திருச்செந்தூர் மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 9–ந் தேதி தூத்துக்குடி நகர் மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 16–ந் தேதி கோவில்பட்டி மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 23–ந்தேதி தூத்துக்குடி ஊரக மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடக்கிறது.

காலை 11 மணிக்கு இந்த குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story