குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவி சாவு


குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
x
தினத்தந்தி 29 April 2017 8:30 PM GMT (Updated: 2017-04-30T00:11:48+05:30)

குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். மோர்தானா அணையில் இருந்து வரும் தண்ணீரில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

குடியாத்தம்,

குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். மோர்தானா அணையில் இருந்து வரும் தண்ணீரில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பள்ளி மாணவி

குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை கிராமத்தை சேர்ந்தவர் இசைக்கேல். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு பிளஸ்சி (10), கிறிஸ்டினா (8), பவித்ரா (6) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

கிறிஸ்டினா அருகில் உள்ள தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். பள்ளி விடுமுறையையொட்டி பிளஸ்டி, கிறிஸ்டினா ஆகியோர் சேம்பள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றனர்.

நீரில் மூழ்கி சாவு

தற்போது மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கவுன்டன்யா ஆறு மற்றும் வலது, இடது கால்வாய்களில் தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் சேம்பள்ளி ஆற்றில் பிளஸ்டி, கிறிஸ்டினா ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கிறிஸ்டினா தண்ணீரில் தவறி விழுந்தாள். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரில் தேடினர். இதில் தண்ணீர் மூழ்கி கிறிஸ்டினா பரிதாபமாக இறந்தாள்.

இச்சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட பின்னர் 24–ந் தேதி பெயிண்டர் பெருமாளும், 26–ந் தேதி ஜிட்டபல்லி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சலீம்பாஷா என்பவரும் நீரில் மூழ்கி இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story