தேவகோட்டையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


தேவகோட்டையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-30T00:50:15+05:30)

தமிழ்நாடு தவ்ஹீக் ஜமாத் தேவகோட்டை கிளை சார்பில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவகோட்டை,

தமிழ்நாடு தவ்ஹீக் ஜமாத் தேவகோட்டை கிளை சார்பில், தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல்ரகீம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அஜ்மீர் அலி, பொருளாளர் சேக் அலாவுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மயிலை அப்துர் ரகீம் ஆர்ப்பாட்டம் குறித்து உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீக் ஜமாத் கட்சியினர், பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. மாட்டுச்சந்தை அருகே மற்றும் ராம்நகர் குடியிருப்பு பகுதியில் தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது போன்று, மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களுக்கும், சிகரெட் உள்ளிட்டவற்றிற்கும் தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story