திருப்பூரில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2017 10:45 PM GMT (Updated: 29 April 2017 7:56 PM GMT)

கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் உள்ள அரசு டாக்டர்கள் திருப்பூர் மாநகராட்சி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றிய டாக்டர்களுக்கு முதுநிலைபட்ட படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இந்த இட ஒதுக்கீட்டை தற்போது கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் ஏற்கனவே இருந்தபடி இடஒதுக்கீட்டை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் உள்ள அரசு டாக்டர்கள் திருப்பூர் மாநகராட்சி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 ஆர்ப்பாட்டத்துக்கு அரசு டாக்டர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சரோஜா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story