ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் முதியவர் கைது


ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் முதியவர் கைது
x
தினத்தந்தி 29 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-30T01:55:16+05:30)

காரைக்கால் அருகே திருநள்ளாறை சேர்ந்தவர் கருணாநிதி. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். மயிலாடுதுறை மன்னம்பந்தல் என்னுமிடத்தில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்தநிலையில் அந்த நிலத்தை விற்பதற்காக அதே பகுதியை சேர்ந்த சாந்தாராமன் (64) என்பவரிடம் விலைபேசி, பாதி தொகை

காரைக்கால்,

காரைக்கால் அருகே திருநள்ளாறை சேர்ந்தவர் கருணாநிதி. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். மயிலாடுதுறை மன்னம்பந்தல் என்னுமிடத்தில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்தநிலையில் அந்த நிலத்தை விற்பதற்காக அதே பகுதியை சேர்ந்த சாந்தாராமன் (64) என்பவரிடம் விலைபேசி, பாதி தொகையை கருணாநிதி முன்பணமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மீதி தொகையை கொடுக்காமல், அந்த நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்து சாந்தாராமன் அதை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கருணாநிதி, இதுகுறித்து நாகப்பட்டினத்தில் உள்ள நிலஅபகரிப்பு பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து சந்தானராமன், கருணாநிதிக்கு போன்செய்து புகாரை வாபஸ் வாங்கும்படியும், வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் சந்தானராமன் மீது கருணாநிதி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தானராமனை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story