காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-30T02:11:49+05:30)

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

பாரதீய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் தில்லைநகரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்க.ராஜைய்யன் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலன், எஸ்.பி.சரவணன், மோகன், கோட்ட அமைப்பு செயலாளர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

குடிநீர் தட்டுப்பாடு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடங்களில் திறக்க முயற்சிக்காமல் மீதமுள்ள மதுக்கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தில் திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீரை வினியோகித்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். மாநகரில் சுற்றித்திரியும் தெருநாய்களால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டி உள்ளது. நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கொள்ளை

டெல்டா பகுதிகளில் விவசாயம் அழிந்து வருவதற்கும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்கும், திருச்சி மாவட்ட மக்கள் குடிநீருக்காக பரிதவிப்பதற்கும் காவிரி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையே காரணம். ஆகவே காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்து இயற்கை வளத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Related Tags :
Next Story