ஓசூர் பகுதியில் கடும் விலை வீழ்ச்சி சாலைகளில் தக்காளிகளை கொட்டும் விவசாயிகள்


ஓசூர் பகுதியில் கடும் விலை வீழ்ச்சி சாலைகளில் தக்காளிகளை கொட்டும் விவசாயிகள்
x
தினத்தந்தி 29 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-30T02:12:53+05:30)

ஓசூர் பகுதியில் கடும் விலை வீழ்ச்சி சாலைகளில் தக்காளிகளை கொட்டும் விவசாயிகள்

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பல ஏக்கர் அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகளவில் தக்காளி பயிரிடப்பட்டதால், தக்காளி மார்க்கெட்டில் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி மார்க்கெட்டுகளில் 50 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ. 1000 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி விலை மளமளவென சரிந்து, ஒரு கூடை தக்காளி 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதனால் தக்காளி விளைவிக்கும் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் கடும் விலை வீழ்ச்சியால் பீர்ஜேபள்ளி, நாயக்கனபள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பல ஏக்கரில் பயிர் செய்த தக்காளிகளை விவசாயிகள் சாலைகளில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். சில பகுதிகளில் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் அவை தானாகவே உதிர்ந்து அழுகிவிடுகிறது.

Related Tags :
Next Story