துறைமுக வழித்தடத்தில் இயக்க 26 புதிய மின்சாரரெயில்கள் ரெயில்வே அதிகாரி தகவல்


துறைமுக வழித்தடத்தில் இயக்க 26 புதிய மின்சாரரெயில்கள்  ரெயில்வே அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 29 April 2017 10:07 PM GMT (Updated: 29 April 2017 10:07 PM GMT)

துறைமுக வழித்தடத்தில் இயக்க 26 புதிய மின்சார ரெயில்கள் வாங்கப்பட உள்ளதாக அதிகாரி கூறினார். 26 புதிய ரெயில்கள் மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடமான பன்வெல் – சி.எஸ்.டி., அந்தேரி – சி.எஸ்.டி. இடையே அதிகளவில் பழைய முதல் தலைமுறை ரெயில்களே இயக்கப்பட்டு வ

மும்பை,

துறைமுக வழித்தடத்தில் இயக்க 26 புதிய மின்சார ரெயில்கள் வாங்கப்பட உள்ளதாக அதிகாரி கூறினார்.

26 புதிய ரெயில்கள்

மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடமான பன்வெல் – சி.எஸ்.டி., அந்தேரி – சி.எஸ்.டி. இடையே அதிகளவில் பழைய முதல் தலைமுறை ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. இதனால் துறைமுக வழித்தடத்தில் அடிக்கடி ரெயில்சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் துறைமுக வழித்தடங்களில் இயக்க 26 புதிய மின்சார ரெயில்களை மத்திய ரெயில்வே வாங்க உள்ளது. 26 புதிய ரெயில்களை தயாரித்து அனுப்புமாறு சென்னையில் உள்ள ஐ.சி.எப்.பிற்கு மத்திய ரெயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சு மணி கூறியதாவது:–

26 புதிய ரெயில்களை தயாரித்து அனுப்ப எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முதல் ரெயிலை தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு மாதந்தோறும் 3 அல்லது 4 ரெயிலை அனுப்பி வைப்போம். புதிய ரெயில்களில் பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதேபோல மோட்டார் மேன் கேபின் குளிர் சாதன வசதியுடன் வடிவமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

சேவை அதிகரிப்பு

புதிய மின்சார ரெயில் வாங்குவது குறித்து மத்திய ரெயில்வே பொதுமேலாளர் கூறும்போது, ‘‘ புதிய ரெயில்கள் வந்தவுடன் துறைமுக வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் பழைய ரெயில்கள் அகற்றப்படும். மேலும் துறைமுக வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதேபோல் பேலாப்பூர் – கார்கோபர் இடையேயும் ரெயில் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளோம் ’’ என்றார்.


Next Story