அதிக வட்டி தருவதாக கூறி 20 ஆயிரம் பேரிடம் ரூ.15 கோடி மோசடி செய்தவர் கைது

அதிக வட்டி தருவதாக கூறி 20 ஆயிரம் பேரிடம் ரூ.15 கோடி மோசடி செய்தவர் போலீசில் சிக்கினார்.
மும்பை,

நிதி நிறுவனம்
மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்தவர் நித்தின் மாஞ்ரேக்கர்(வயது37). இவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதில் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிகவட்டி தருவதாக விளம்பரம் செய்திருந்தார். இதனை நம்பிய முதலீட்டாளர்கள் பலர் இவரது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
நித்தின் மாஞ்ரேக்கருக்கு உதவியாக கேரளாவை சேர்ந்த டேனியல் எட்வட்டு (45), சதீஷ் பால், மனோஜ் பால் ஆகியோர் ஏஜெண்டாக செயல்பட்டு மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வந்தனர்.
ரூ.15 கோடி மோசடி
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிதி நிறுவனம் மூடப்பட்டு 4 பேரும் தலைமறைவானார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நித்தின் மாஞ்ரேக்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் அதிக வட்டி தருவதாக கூறி 20 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.15 கோடி வரை மோசடி செய்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
கைது
இதன்படி போலீசார் விசாரணை நடத்தி டேனியல் எட்வர்டு, சதீஷ் பால் ஆகிய 2 பேரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நித்தின் மாஞ்சரேக்கரை வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்து வந்த நித்தின் மாஞ்சரேக்கரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இவர் 2014-ம் ஆண்டு முதல் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story