டாக்டர்கள் நடத்திய உறங்கும் போராட்டம் கோரிக்கைகளை ரத்தத்தில் எழுதினார்கள்


டாக்டர்கள் நடத்திய உறங்கும் போராட்டம் கோரிக்கைகளை ரத்தத்தில் எழுதினார்கள்
x
தினத்தந்தி 29 April 2017 11:52 PM GMT (Updated: 2017-04-30T05:22:12+05:30)

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் அரசு டாக்டர்கள் தங்களின் கோரிக்கைகளை ரத்தத்தால் எழுதி போராட்டத்தை தொடர்ந்தனர்.

சென்னை,

அரசு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்களுக்கு முதுநிலை மேற்படிப்புகளில் வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளுக்கு அரசும், நீதிமன்றமும் செவிசாய்க்காததால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் நேற்று உறங்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் அரசு டாக்டர்கள் தங்களின் கோரிக்கைகளை ரத்தத்தால் எழுதி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் கூறுகையில், ‘எங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசும், நீதிமன்றமும் செவிசாய்க்கவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டத்தை நாங்கள் கைவிடமாட்டோம். அரசு வாய்மொழியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடைமுறையில் அதை செயல்படுத்தினால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிட திட்டமிட்டு இருக்கிறோம்’ என்றனர். 

Next Story