ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 May 2017 9:45 PM GMT (Updated: 2017-05-04T02:19:35+05:30)

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. டி.ஏ.ஏழுமலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. டி.ஏ.ஏழுமலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மருந்து, மாத்திரைகள் அறைக்கு சென்ற அவர் அங்கு போதிய மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து தரவேண்டும். கூடுதல் கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சார்பிலும், நோயாளிகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார்.


Next Story