கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்


கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-04T02:38:22+05:30)

கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

களியக்காவிளை,

தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கை அட்டைகளை அணிந்து போராட்டம் நடைபெற்றது. குழித்துறையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் ஜெயசிங் தலைமை தாங்கினார்.

இதில், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்தபடி சங்க ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) , நாளையும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

Related Tags :
Next Story