அனைத்து குவாரிகளிலும் கனரக எந்திரங்கள் மூலம் மணல் அள்ள நடவடிக்கை எடுக்க கோரி மனு


அனைத்து குவாரிகளிலும் கனரக எந்திரங்கள் மூலம் மணல் அள்ள நடவடிக்கை எடுக்க கோரி மனு
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 3 May 2017 9:09 PM GMT)

அனைத்து குவாரிகளிலும் கனரக எந்திரங்கள் மூலம் மணல் அள்ள நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருச்சி,

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி மற்றும் நிர்வாகிகள் நேற்று திருச்சி பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் அளித்த மனுவில், “கடந்த 29-ந் தேதி எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 21 அரசு மணல் குவாரிகள் இயக்கப்படாமல் மூடப்பட்டன. இதனால் தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அனைத்து குவாரிகளிலும் கனரக எந்திரங்களை கொண்டு மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு மணல் குவாரிகளில் விதிமுறைகளுக்குட்பட்டு பொதுப்பணித்துறையே நேரடியாக லாரிகளுக்கு மணல் வழங்கவும், அரசு குவாரிகளில் முறைகேடு நடைபெறாமல் இருக்க ‘ஸ்வைப் மெஷின்‘ பயன்படுத்தி விற்பனை பதிவு முறையில் ஒரேவிலைக்கு அனைத்து லாரிகளுக்கும் மணல் வழங்க வேண்டும்” என்று கூறி இருந்தனர். 

Related Tags :
Next Story