பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் சாலைமறியல் 26 பேர் கைதாகி விடுதலை


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் சாலைமறியல் 26 பேர் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 3 May 2017 11:00 PM GMT (Updated: 3 May 2017 9:12 PM GMT)

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 26 டாக்டர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

புதுக்கோட்டை,

அரசு டாக்டர்களுக்கான 50 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் சார்பில் கடந்த 10 நாட்களாக ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சாலை மறியல்

அதன் ஒரு கட்டமாக நேற்று டாக்டர்கள் அரசு மருத்துவமனை முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர். குத்தூஸ் தலைமையில் டாக்டர்கள் அருணகிரி, முத்துராஜா, ராஜா உள்பட பலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட 26 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story