அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-04T02:42:30+05:30)

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,

அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் வரவேற்றார். சண்முகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உடலில் 40 சதவீத குறைபாடு உடையவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் தவமணி, ரேவதி, கொளஞ்சி நாதன், சட்டதுரை, ஜெயபால், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story