சிறுவர், சிறுமிகளுக்கு 2-வது கட்ட நீச்சல் பயிற்சி; நாளை தொடங்குகிறது


சிறுவர், சிறுமிகளுக்கு 2-வது கட்ட நீச்சல் பயிற்சி; நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-04T02:42:32+05:30)

பெரம்பலூரில் சிறுவர், சிறுமிகளுக்கு 2-வது கட்ட நீச்சல் பயிற்சி நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்கு கிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் 8 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல்கட்டமாக நீச்சல் பயிற்சி முகாம் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சிறுவர்-சிறுமிகள் 13 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். கடும் வெயில் தாக்கத்தின் காரணமாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை சிறுவர்-சிறுமிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். முதல்கட்ட நீச்சல் பயிற்சி முகாம் இன்று (வியாழக்கிழமை) நிறை வடைகிறது.

2-வது கட்ட முகாம்

2-வது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் 18-ந்தேதி வரையிலும், 3-ம் கட்ட பயிற்சி முகாம் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரையிலும் நடக்கிறது. காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நீச்சல் பழக ஆர்வமுள்ள 8 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் உரிய கட்டணத்தை செலுத்தி இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே நீச்சல் தெரிந்த சிறுவர்-சிறுமிகளும் இந்த முகாமில் பங்கேற்று தங்களது நீந்தும் திறனையும், போட்டியில் பங்கேற்கும் தகுதியையும் மேம் படுத்திக் கொள்ளலாம் என்று நீச்சல் பயிற்றுனர் தெரி வித்தார். 

Related Tags :
Next Story