தஞ்சையில் டாக்டர்கள் பேரணி


தஞ்சையில் டாக்டர்கள் பேரணி
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 3 May 2017 9:14 PM GMT)

தஞ்சையில் டாக்டர்கள் பேரணி

தஞ்சாவூர்,

தமிழக அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்புகளில் முன்பு இருந்தது போல 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இந்திய மருத்துவகவுன்சில் விதிகளில் மாற்றம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.

பணிக்காலத்தின்போது இறக்கும் அரசு டாக்டர் குடும்ப நலன் காக்க நிதி தொகுப்பை உருவாக்க வேண்டும். பெண் அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு கொடுப்பது போல குழந்தை பராமரிப்பு விடுப்பு 2 ஆண்டுகள் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கம் சார்பில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் மருத்துவமனை டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டாக்டர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தை சேர்ந்த டாக்டர்களும் நேற்று முன்தினம் காத்திருப்பு, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்று டாக்டர்கள் பேரணி நடத்தினர். தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு இருந்து பேரணி தொடங்கி ஆற்றுப்பாலம், காந்திஜி சாலை வழியாக ராசாமிராசுதார் மருத்துவமனையை அடைந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஆடலரசி தலைமையில் நடந்த இந்த பேரணியில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பேரணியில் ஈடுபட்ட டாக்டர்கள் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story