வேப்பனப்பள்ளி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்


வேப்பனப்பள்ளி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 9:59 PM GMT (Updated: 2017-05-04T03:29:40+05:30)

வேப்பனப்பள்ளி அருகே மதுக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பந்தலூர் கிராமம். இந்த கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நெடுசாலை, பந்தலூர், வராகசந்திரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து அந்த கடையை அகற்ற வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது போலீசாரிடம் பேசிய பொதுமக்கள் இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Next Story