மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை 15 நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்


மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை 15 நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்
x
தினத்தந்தி 3 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-04T04:30:05+05:30)

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை 15 நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.

பெங்களூரு,

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை 15 நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.

சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

“மத்திய அரசு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கட்டுமான நிறுவனங்கள் கட்டாயம் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த சட்டத்தால் இனிமேல் வீடு மற்றும் வீட்டுமனைகள் வாங்குபவர்களை கட்டுமான நிறுவனங்கள் ஏமாற்ற முடியாது.

மேலும் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை. இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்படும். மத்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டம் அப்படியே அமல்படுத்தப்படும்.

மேகதாதுவில் புதிய அணை

இந்த சட்டத்தில் சில முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு ஒப்புதல் பெற திட்ட அறிக்கை 15 நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.“

இவ்வாறு மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.



Next Story