பாதாள சாக்கடை நீரேற்று தொட்டி அமைப்பதை எதிர்த்து போராட்டம் பெண்கள் உள்பட 103 பேர் கைது


பாதாள சாக்கடை நீரேற்று தொட்டி அமைப்பதை எதிர்த்து போராட்டம் பெண்கள் உள்பட 103 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2017 11:40 PM GMT (Updated: 3 May 2017 11:39 PM GMT)

அரக்கோணம், சோமசுந்தரம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை நீரேற்று தொட்டி அமைக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊழியர்கள் சென்ற போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரக்கோணம்,

அரக்கோணம், சோமசுந்தரம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை நீரேற்று தொட்டி அமைக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊழியர்கள் சென்ற போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் ராஜலட்சுமி தலைமையில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. அதில் எந்தவித உடன்பாடும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று சோமசுந்தரம் நகர் பகுதியில் நீரேற்று தொட்டி அமைக்க ஊழியர்கள் சென்றனர். அப்போது அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தாசில்தார் பாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் 41 பெண்கள், 62 ஆண்கள் உள்பட 103 பேர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.



Next Story