ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிபஸ் மோதி மேஸ்திரி பலி
ஆம்பூர் அருகே நாயக்கனேரிமலை, சீக்கஜொனை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே நாயக்கனேரிமலை, சீக்கஜொனை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மோகன் (வயது 27), கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு, அவரது ஊரை சேர்ந்த நணபர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை சவுந்தர் (27) என்பவர் ஓட்டினார். கிருஷ்ணன் (30), மோகன் ஆகியோர் பின்னால் உட்கார்ந்து வந்தனர். சதுரக்கல்மேடு என்ற பகுதியில் முன்னால் சென்ற மினிபஸ்சை முந்தி செல்ல முயன்றபோது திடீரென மினிபஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.