நேர்முகத்தேர்வில் சைக்கிள் ஓட்டிய பெண்கள் மீன்பிடி துறைமுக உதவியாளர் பணிக்கான


நேர்முகத்தேர்வில் சைக்கிள் ஓட்டிய பெண்கள் மீன்பிடி துறைமுக உதவியாளர் பணிக்கான
x
தினத்தந்தி 12 May 2017 4:15 AM IST (Updated: 11 May 2017 10:22 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுக அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஆண்களும், பெண்களும் என மொத்தம் 45 பேர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுக அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஆண்களும், பெண்களும் என மொத்தம் 45 பேர் பங்கேற்றனர். அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கட்டாயம் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட ஆண்களும், பெண்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் முன் சைக்கிள் ஓட்டிக் காட்டினார்கள்.


Related Tags :
Next Story