ஈரோட்டில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2017 4:15 AM IST (Updated: 11 May 2017 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,

தட்சண ரெயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்ட துணைச்செயலாளர் மதுசூதனன் தலைமை தாங்கினார். பொருளாளர் முருகேஷ் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் சாம்பசிவம் பேசினார்.

7–வது ஊதிய குழு பரிந்துரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கவேண்டும். அனைத்து ஊதிய படிகளையும் காலதாமதம் இன்றி வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் சேலம் கோட்ட துணைச்செயலாளர் அன்பரசு மற்றும் ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story