மன்னார்குடி சக்திவேல் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

மன்னார்குடி,
மன்னார்குடி காளவாய்கரை சித்தர் துரைராஜ் சுவாமிகள் மடாலயத்தில் சக்திவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் சஷ்டி, கார்த்திகை நாளில் சக்திவேல் முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சித்ரா பவுர்ணமியான நேற்று முன்தினம் அரித்திராநதி தெப்பக்குளம் கரையிலிருந்து திரளான பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சக்திவேல் முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த விழா இன்று ( வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா என்.டி.ராஜசேகரன், மண்டகப்படிதாரர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story