நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் திருவாரூரில் நடந்தது


நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 12 May 2017 4:15 AM IST (Updated: 12 May 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் திருவாரூரில் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் கல்வி நிலையங்களில் இந்தி திணிப்பு, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன் (கீழ்வேளூர்), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), ஆடலரசன் (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. தீர்மான குழு செயலாளர் சபாபதிமோகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களை பல இன்னல்படுத்தி மிரட்டியதற்கு காரணம் தமிழகத்தில் இருந்து டாக்டர்கள் வந்து விடக் கூடாது என்கிற எண்ணத்தோடு பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

போட்டி தேர்வு

இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கும், இளைஞர் களுக்கும் உள்ளது. போட்டி தேர்வுகளிலும் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் நகரசபை துணை தலைவர் செந்தில், மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் பாலச் சந்திரன், சேகர் கலிய பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் வாரைபிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் புலிவலம்தேவா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story