பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 12 May 2017 2:30 AM IST (Updated: 12 May 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 57). விவசாயி.  நேற்று காலை இவரது மனைவி பூப்பறிக்கும் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஜெயராமன் அருகில் உள்ள ரே‌ஷன் கடைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 4 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story