பாளையங்கோட்டையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2–வது நாளாக நேர்காணல்


பாளையங்கோட்டையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2–வது நாளாக நேர்காணல்
x
தினத்தந்தி 12 May 2017 3:00 AM IST (Updated: 12 May 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 2–வது நாளாக நேற்றும் நடந்தது. கால்நடை பராமரிப்பு உதவியாளர் நெல்லை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 67 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மொத்தம

நெல்லை,

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 2–வது நாளாக நேற்றும் நடந்தது.

கால்நடை பராமரிப்பு உதவியாளர்

நெல்லை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 67 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மொத்தம் 12 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு நேர்காணல் அழைப்பானை ஏற்கனவே அனுப்பப்பட்டு இருந்தது.

விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை தொடங்கி மாலை வரை நடந்தது. 2–வது நாளாக நேற்றும் நேர்காணல் நடந்தது.

17–ந் தேதி வரை

நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருந்தவர்கள் காலை 8 மணி முதலே வந்து வரிசையில் நின்றனர். காலை 9.30 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. கல்வி, இருப்பிடம்,, சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சைக்கிள் ஓட்டும் திறமை, கால்நடைகளை கையாளும் திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.

நேர்காணலுக்கு வந்து இருந்தவர்கள், பள்ளிக்கூட மைதானத்தில் உள்ள கம்பத்தில் கயிற்றால் கட்டப்பட்டு இருந்த மாடுகளை அவிழ்த்து வேறு கம்பத்தில் கட்டுவது போன்றவற்றை செய்தனர். இந்த நேர் காணல் வருகிற 17–ந் தேதி வரை நடைபெறுகிறது.


Next Story