ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பூங்கோதை ஆலடி அருணா, போராட்டம் அறிவிப்பு
ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டம் நடத்தப்படும் என, பூங்கோதை ஆலடி அருணா, எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டம் நடத்தப்படும் என, பூங்கோதை ஆலடி அருணா, எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ.ஆய்வுஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் பூங்கோதை எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் குறைகள் கேட்டார். பின்னர் அவர் கூறியதாவது:– ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யப்படாமல் உள்ளது. ஒரு தாலுகா ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் இருக்க வேண்டும். போதிய டாக்டர்களும் நியமிக்காமல் பெயரளவிற்கு தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி வைத்துள்ளனர்.
போராட்டம் அறிவிப்புகர்ப்பிணி பெண்கள் அமருவதற்கு கூட இருக்கை வசதிகள் இல்லை. எனவே இன்னும் ஒரு வாரத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன், டாக்டர்களை நியமனம் செய்யாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், என்று கூறினார்.
அப்போது ஆலங்குளம் நகர தி.மு.க. செயலாளர் நெல்சன், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் செல்லத்துரை உள்பட பலர் உடனிருந்தனர்.