திருமருகல், நாகை ஒன்றியங்களில் குடிநீர் திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு
திருமருகல், நாகை ஒன்றியங்களில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம், திருமருகல் மற்றும் நாகை ஒன்றியங்களில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அக்கரைப்பேட்டை ஊராட்சியில் மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதி திட்டத்தின் கீழ் ரூ.62 ஆயிரத்து 700 மதிப்பில் போர்வெல் அமைத்து குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணியையும், கீச்சாங்குப்பத்தில் ரூ.85 ஆயிரம் செலவில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணியினையும், மஞ்சக்கொல்லை ஊராட்சியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.48 ஆயிரம் மதிப்பில் வண்ணான் குளம் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினையும், ஐவநல்லூர் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணியினையும், பாலையூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3½ லட்சம் மதிப்பில் அழிஞ்சமங்கலம் காடுவெட்டியில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியினை தரமாகவும், விரைந்தும் முடிக்க சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
நடவடிக்கை
பின்னர், திருமருகல் ஒன்றியத்தில் கொத்தமங்கலம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியின் கீழ் ரூ.6½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சேஷமூலையில் ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை பார்வையிட்டார். கொத்தமங்கலம் ஐயனார்குளத்தை தூர்வாரி பொதுமக்களின் பயன்பயன்பாட்டிற்கு விடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மஞ்சக்கொல்லை, ஐவநல்லூர், புத்தூர், பரங்கிநல்லூர், செல்லூர் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வீடுகளில் குடிநீர் இணைப்பு கொடுத்திருப்பவர்களின் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் பணியினையும் பார்வையிட்டார். பின்னர் அனுமதியின்றி வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story