ஏர்வாடி அருகே ஆற்றில் மூழ்கி தந்தை– மகன் சாவு குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த இடத்தில் பரிதாபம்
ஏர்வாடி அருகே ஆற்றில் மூழ்கி தந்தை– மகன் உயிரிழந்தனர். குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த இடத்தில் இந்த பரிதாபம் நடந்துள்ளது.
ஏர்வாடி,

கல்லூரி பேராசிரியர்
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நரசிம்மன் (வயது 50), தனியார் கல்லூரி பேராசிரியர். இவர், தன்னுடைய மனைவி ஜெயஸ்ரீ மற்றும் நந்தகோபால் (17), பத்ரிநாத் (13) ஆகிய 2 மகன்களுடன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலுக்கு காரில் வந்தார்.
அங்கு காலை 7.30 மணி அளவில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் மலையில் உள்ள நம்பி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். சாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக குளித்து விட்டு வருவோம் என்று லட்சுமி நரசிம்மன் மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.
தண்ணீரில் மூழ்கினர்
அப்போது பேராசிரியரின் மூத்த மகன் நந்தகோபால் ஆற்றில் இறங்கி குளிக்க தொடங்கினான். அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்த தடாகத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். அந்த பகுதி மிகவும் ஆழமான பகுதி என்பதாலும், நீச்சல் தெரியாததாலும் நந்தகோபால் தண்ணீரில் மூழ்க தொடங்கினான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி நரசிம்மன், மகன் மூழ்கும் இடம் ஆழமான தடாகம் என்பதையும் அறியாமல் ஆற்றுக்குள் இறங்கினார். இவருக்கும் நீச்சல் தெரியாததால் மகனுடன் சேர்ந்து இவரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.
கணவரும், மகனும் தண்ணீரில் மூழ்குவதை கண்ட ஜெயஸ்ரீ, அவர்களை காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கினார். அவரும் தடுமாறி தடாகத்தில் விழுந்தார். 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதைப்பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி நரசிம்மனின் 2–வது மகன் பத்ரிநாத், அங்குள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தலைதெறிக்க ஓடினான்.
2 பேர் உயிரிழந்த பரிதாபம்
சிறுவன் ஒருவன் பதறி அடித்துக் கொண்டு ஓடி வருவதை கண்ட வேட்டை தடுப்பு காவலர்கள் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டு நடந்த விவரங்களை கேட்டனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் ஆற்றுப்பகுதிக்கு ஓடினர். அதற்குள் லட்சுமி நரசிம்மன், நந்தகோபால் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெயஸ்ரீ மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் ஜெயஸ்ரீயை உயிருடன் மீட்டனர். லட்சுமி நரசிம்மன், அவருடைய மகன் நந்தகோபால் ஆகிய 2 பேரது உடல்களையும் மீட்டனர். கணவன், மகன் இருவரும் இறந்ததை கண்ட ஜெயஸ்ரீ கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஹரிகுமரன், சமுத்திரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்தவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நம்பி கோவிலுக்கு சனிக்கிழமையன்றுதான் அதிக பக்தர்கள் வருவார்கள். நேற்று வியாழக்கிழமை என்பதால் கோவிலுக்கு குறைவான பக்தர்களே வந்து இருந்தனர். அதனால்தான் ஆற்றில் மூழ்கிய தந்தை– மகன் இருவரையும் காப்பாற்ற முடியாமல் போனது என்று பக்தர் ஒருவர் கூறினார்.

Related Tags :
Next Story