சித்ரா பவுர்ணமியையொட்டி முத்தரையர் சங்கத்தினர் ஊர்வலம்
பெரம்பலூரில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் பெரம்பலூர் சுற்றி உள்ள பகுதிகளை முற்காலத்தில் ஆட்சி புரிந்த ஊட்டத்தூர் நக்கன் சுருதிமான், ராஜமல்லன் முத்தரையர் ஆகியோர் நினைவை போற்றும் வகையில் ஊர்வலம் மற்றும் சித்ரா பவுர்ணமி நிலவு விழா நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் பெரம்பலூர் சுற்றி உள்ள பகுதிகளை முற்காலத்தில் ஆட்சி புரிந்த ஊட்டத்தூர் நக்கன் சுருதிமான், ராஜமல்லன் முத்தரையர் ஆகியோர் நினைவை போற்றும் வகையில் ஊர்வலம் மற்றும் சித்ரா பவுர்ணமி நிலவு விழா நடந்தது. இதனையொட்டி ஊர்வலம் காமராஜர் சிக்னலில் இருந்து புறப்பட்டு காந்தி சிலை வழியாக மதரசா சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசண்முகம் வரவேற்றார். இதில் மாநில தலைவர் காஞ்சி.காடகமுத்தரையன், மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் செந்தில் இளமான், முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story