சாந்தநாத கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாந்தநாத கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை சாந்தநாத கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கீழராஜவீதியில் இருந்து செல்வதற்கு ஒரு சாலை உள்ளது. இந்த சாலையின் இரு புறங்களிலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் கலெக்டர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஐகோர்டு கிளை உத்தரவிட்டு இருந்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதைத்தொடர்ந்து கலெக்டர் கணேஷ் அறிவுரையின்படி கீழராஜவீதியில் இருந்து சாந்தநாத கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மேற்பார்வையில் நேற்று நடைபெற்றது.

அப்போது நகரமைப்பு அலுவலர் மாலதி, ஆய்வாளர்கள் செல்லபாண்டியன், செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் முருகேசன், இளநிலை பொறியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும்பொருட்டு அந்த பகுதியில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story