காரைக்குடி, கல்லல் பகுதிகளில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடி மற்றும் கல்லல் பகுதிகளில் நடைபெற்ற கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள சொக்கலிங்கம்புதூர் காமன்ராஜா கோவில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சொக்கலிங்கம்புதூர்–குன்றக்குடி சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் 17 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுளாக பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சொக்கலிங்கம்புதூர் காமன்ராஜா வண்டியும், 2–வது பரிசை சக்தி வண்டியும், 3–வது பரிசை பூவாண்டிப்பட்டி மணிகண்டன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சொக்கலிங்கம்புதூர் சக்தி வண்டியும், 2–வது பரிசை கீர்த்தணி வண்டியும், 3–வது பரிசை மேலூர் தேத்தாம்பட்டி பிரசித்தேவ் வண்டியும் பெற்றது.
கல்லல்இதேபோல் கல்லல் அருகே உள்ள புளியங்குடிப்பட்டி கருங்கமுடைய அய்யனார் கோவில் காவடி எடுப்பு திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புளியங்குடிப்பட்டி–காளையார்கோவில் சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை கல்லல் அழகுசுகன்யா வண்டியும், 2–வது பரிசை மேலூர் மணிகண்டன் வண்டியும், 3–வது பரிசை நாட்டரசன்கோட்டை ஆண்டிக்கோனார் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கொடிக்குளம் கவுதம் வண்டியும், 2–வது பரிசை பாதரக்குடி முத்துமாரி வண்டியும், 3–வது பரிசை சிவகங்கை அருண் வண்டியும் பெற்றது.
முடிவில் வெற்றிபெற்ற வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.