பாலக்கோடு பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், மகாத்மா காந்தி ரோடு, ஓசூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
பாலக்கோடு,
பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், மகாத்மா காந்தி ரோடு, ஓசூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு கடையை அகற்றும் பணி நடைபெற்றது. கடைகள், கட்டிடங்கள் இடிப்பதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
Related Tags :
Next Story