புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 May 2017 4:45 AM IST (Updated: 12 May 2017 8:18 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலூர்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கூடப்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகன் அன்பு என்கிற அன்பரசன் (வயது 24). கடந்த 5–ந் தேதி அன்பரசன் உள்பட 6 பேர் சேர்ந்து புதுச்சேரி அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்த வீரப்பனை கொலை செய்தனர். இது தொடர்பாக அன்பரசன் உள்பட 6 பேரும் ரெட்டிச்சாவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் அன்பரசன் மீது வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை தொடர்பாக 7 வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அன்பரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதையடுத்து, தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அன்பரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரபாலன், அன்பரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.


Next Story