திருவண்ணாமலையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


திருவண்ணாமலையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 13 May 2017 4:00 AM IST (Updated: 12 May 2017 9:57 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜீவா (வயது 50). அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி பழனி (52) என்பவர் ஜீவா தனியாக இருந்தபோது திடீரென நுழைந்து மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுக்க முடியாது என்று ஜீவா கூறி உள்ளார்.

அதனால் ஆத்திரம் அடைந்த பழனி ஜீவாவை திட்டி அடித்து, உதைத்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த ஜீவாவின் சித்தி முனியம்மா (72) அணிந்திருந்த தங்க சங்கிலியை பழனி பறிக்க முயன்றுள்ளார். அதை தடுத்த ஜீவாவுக்கு பழனி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து ஜீவா திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story