கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் ரூ.1.30 கோடியில் நடைபெற உள்ள அடிப்படை வசதிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பாவூர்சத்திரம்,
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் ரூ.1.30 கோடியில் நடைபெற உள்ள அடிப்படை வசதிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நரசிம்மர் கோவில்நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வருகைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பிரபாகரன் எம்.பி.யிடம் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையின் பேரில் கோவிலில் குடிநீர், கழிப்பறை, மின்வசதி, நடைபாதை, வாகன நிறுத்தம், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.1.30 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அந்த பணிகளை சுற்றுலாத்துறை மூலம் மேற்கொள்ளும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை, பிரபாகரன் எம்.பி நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஆய்வுஇதை ஏற்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலை பார்வையிட்ட அமைச்சர், கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
ஆய்வின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, பிரபாகரன் எம்.பி., செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ, கலெக்டர் மு.கருணாகரன், தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், கட்சியினர் உடனிருந்தனர்.