தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 96.44 சதவீத மாணவ– மாணவிகள் தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 96.44 சதவீத மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 96.44 சதவீத மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்–2 தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்ட தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர் ஆ.அனிதா வெளியிட்டார்.
தேர்வு முடிவுகள் அனைத்தும் நேற்று காலையில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காலை 10 மணிக்கு பள்ளிக்கூடங்களில் மதிப்பெண் பட்டியல் ஒட்டப்பட்டது. இதனை மாணவ– மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.
96.44 சதவீதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 181 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ– மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர். இதில் 9 ஆயிரத்து 416 மாணவர்களும், 11 ஆயிரத்து 995 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 411 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 8 ஆயிரத்து 882 மாணவர்கள், 11 ஆயிரத்து 766 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 648 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.44 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 0.97 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 3.76 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாநில அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 4–வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 5–வது இடம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கல்வி மாவட்டம்
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 937 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 13 ஆயிரத்து 554 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.25 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 474 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7 ஆயிரத்து 94 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.92 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

Related Tags :
Next Story