நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 96.08 சதவீத மாணவ– மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 1.32 சதவீதம் அதிகம்
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் 96.08 சதவீத மாணவ– மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.32 சதவீதம் அதிகமாகும்.
நெல்லை,

பிளஸ்–2 தேர்வு முடிவுகள்
நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் அறிவுரையின்படி, நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலா, பிளஸ்–2 தேர்வு முடிவுகளை நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காலை வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி என மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. நெல்லை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 706 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதில் 13 ஆயிரத்து 161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசி கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 509 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதில் 11 ஆயிரத்து 989 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 826 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதில் 11 ஆயிரத்து 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 41 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதில் 36 ஆயிரத்து 550 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1.32 சதவீதம் கூடுதல்
தேர்ச்சி விகிதம் 96.08 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 94.76 பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.32 சதவீதம் அதிகமாகும். நெல்லை மாவட்டத்தில் அதிக அளவு மாணவ– மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். மாநில அளவில் நெல்லை மாவட்டம் 7–வது இடத்தை பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கமாக பிளஸ்–2 தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளதால் மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேடு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் மதிப்பெண்களின் பட்டியல் அனுப்பப்பட்டது. பல மாணவர்கள் இணையதளம் மூலம் மதிப்பெண்கள் பட்டியலை பார்த்தனர்.
பள்ளிக்கூடங்களில் கூட்டம் இல்லை
பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ– மாணவிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு அறிவிப்பு பலகைகளில் மதிப்பெண்களுடன் ஒட்டப்பட்டு இருந்தது. குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண்கள் பட்டியல் அனுப்பப்பட்டதால், பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கூட்டம் அதிகம் இல்லை. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவர்கள் மட்டும் பள்ளிக்கூடங்களில் வந்து மதிப்பெண்களை பார்த்தனர்.

Related Tags :
Next Story