திருச்செந்தூர், கயத்தாறில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம்


திருச்செந்தூர், கயத்தாறில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம்
x
தினத்தந்தி 13 May 2017 2:00 AM IST (Updated: 13 May 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், கயத்தாறில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம் நடந்தது.

திருச்செந்தூர்,

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், கயத்தாறில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம் நடந்தது.

திருச்செந்தூர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு 31–வது ஆண்டாக மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில், செந்தில் ஆண்டவர் புண்ணிய தீர்த்தம் மற்றும் ஜோதியை கொண்டு செல்லும் தொடர் ஓட்டம் நடந்தது.

திருச்செந்தூர் வீரபாண்டிய கட்டபொம்மன் மடம் முன்பு நடந்த தொடக்க நிகழ்ச்சியில் நடராஜ் இறைவணக்கம் பாடினார். முருகபூபதி வரவேற்று பேசினார். த.மா.கா. வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் இளைஞர்களிடம் புண்ணிய தீர்த்தம் மற்றும் ஜோதியை வழங்கி தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான இளைஞர்கள் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஓட்டமாக சென்றனர். அவர்களின் பின்னால் மோட்டார் சைக்கிள்களில் ஏராளமானவர்கள் அணிவகுத்து சென்றனர்.

ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் துணை தலைவர் வீரபாண்டி செல்லச்சாமி, ராமகிருஷ்ணன், ஊமைத்துரை தொண்டர் படை தலைவர் அருண்பிரசாத், செயலாளர் கன்னிசாமி கார்த்திக், பொருளாளர் கணேச முருகன், துணை தலைவர் செந்தில்குமார், துணை செயலாளர் செந்தில்குமார், நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

கயத்தாறு

இதேபோன்று கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம் புறப்பட்டது. ஜோதி மற்றும் வீரவாள் ஏந்தியவாறு இளைஞர்கள் தொடர் ஓட்டமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு அணிவகுத்து சென்றனர்.

இளைஞர்களின் சிலம்பாட்டம், வாள்சண்டை போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story